சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!!

சென்னை/காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: ​
சென்னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் திருப்பலியை நிறைவேற்றினார்.

தொடர்ந்து நேற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் இருதயஆண்டவர் திருத்தலம், பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

காஞ்​சிபுரம் நகரில் உள்ள தூய ஆவே மரியா ஆலயம், சிஎஸ்ஐ தூய யோவான் ஆலயம் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் நேற்​று​முன்​தினம் நள்​ளிரவு 12 மணி​யள​வில் ஆலய மணி​கள் முழங்க, இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவிக்​கும் சிறப்பு ஆராதனை​கள் தொடங்​கின. இதில் ஆயிரக்​கணக்​கான கிறிஸ்​தவர்​கள் கலந்​துக் கொண்டு மெழுகு​வர்த்தி ஏந்தி பிரார்த்​தனை செய்​தனர்.

ஆலய வளாகங்​களில் வண்ண விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்ட கிறிஸ்துமஸ் குடில்​கள் மற்​றும் பிரம்​மாண்​ட​மான கிறிஸ்துமஸ் மரங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன.

இதே​போல், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​களில் உள்ள கிறிஸ்தவ தேவால​யங்​களில், கிறிஸ்துமஸ் விழா நேற்று வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது.

இதில், கிறிஸ்தவ மக்​கள் குடும்​பத்​துடன் பங்​கேற்று சிறப்பு வழி​பாடு​களில் ஈடு​பட்​டனர். மேலும், வீடு​களில் குடில் அமைத்து குழந்தை இயேசு பிறப்பை சித்​தரிக்​கும் காட்​சியை அலங்​கரித்து வைத்​திருந்​தனர்.

இதே​போல், சிஎஸ்ஐ தேவால​யம் ஆர்​.சி. சர்ச், இசிஐ சர்ச், பெந்​தேகோஸ்தே உள்​ளிட்ட தேவால​யங்​கள் மின்​விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தன. அனைத்து தேவால​யங்​களி​லும் சிறப்பு ஆராதனை​கள் நடை​பெற்​றன.

இந்​நிகழ்ச்​சி​யில், கிறிஸ்தவ மக்​கள் குடும்​பத்​தினருடன் திரளாக பங்​கேற்​றனர். கிறிஸ்துமஸ் வழி​பாடு முடிந்​ததும், ஒரு​வருக்​கொரு​வர் வாழ்த்​துகளை பரி​மாறிக் கொண்​டனர்.

மேலும், கிறிஸ்​மஸ் தாத்தா வேடம் அணிந்த நபர்​கள் குழந்​தைகளுக்கு இனிப்​பு​கள் மற்​றும் பரிசுகள் வழங்கி மகிழ்​வித்​தனர்.

திரு​வள்​ளூர் மாவட்டம்: திரு​வள்​ளூர், ஜே.என்​.​சாலை புனித பிரான்​சிஸ் சலேசி​யர் தேவால​யம், பெரியகுப்​பம் டி.இ.எல்​.சி தேவால​யம், மணவாள நகர் ஜெயகோபுரம் ஏ.ஜி.தே​வால​யம் மற்​றும் ஆவடி, பூந்​தமல்​லி, திருத்​தணி, திரு​வாலங்​காடு, ஆர்​.கே.பேட்​டை, பள்​ளிப்​பட்​டு, ஊத்​துக்​கோட்​டை, பொன்​னேரி, கும்​மிடிப்​பூண்டி என, மாவட்​டம் முழு​வதும் உள்ள கிறிஸ்தவ தேவால​யங்​களில் கிறிஸ்துமஸ் பண்​டிகை​யையொட்டி கிறிஸ்​தவர்​கள் சிறப்பு வழி​பாடு​களில் ஈடு​பட்​டனர். கிறிஸ்​தவர்​கள்​ தங்​களது உறவினர்​, நண்​பர்​களுக்​கு இனிப்​பு மற்​றும்​ கேக்​கு​களை வழங்​கி மகிழ்​ந்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *