சாதனை நாயகன் சூர்யவன்ஷிக்கு விருது வழங்கி கவுரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!!

பீகார்;

பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அவரது கிரிக்கெட் பயணம் 4 வயதில் தொடங்கியது.

அவரது தந்தை அவரது ஆர்வத்தை அடையாளம் கண்டு 9 வயதில் சமஸ்திபூரில் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். அவர் தனது சாதனைகளால் கிரிக்கெட் உலகில் பேசப்படும் ஒரு வீரராக உருவெடுத்துள்ளார்.

அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். மேலும் இளம் வயதில் சதம் (101 ரன்கள் 38 பந்துகளில்) அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அடுத்தடுத்து பல சாதனைகளை அவர் படைத்து வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்நிலையில் 14 வயதிலேயே பல சாதனைகளை படைத்த சூர்யவன்ஷிக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி சூர்யவன்ஷிக்கு இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்கினார். இது சிறந்த இளம் திறமையாளர்க ளுக்கு வழங்கப்படும் உயரிய குடிமகன் விருது ஆகும்.

இந்த விருது பெறுவதற்காக இன்று நடந்து வரும் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *