குளிர்காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் எவை எவை? என்னென்ன சாப்பிடலாம்?

குளிர்காலம் தொடங்கிவிட்டாலே சூடான மற்றும் பொரித்த உணவுகள் மீது நமக்கு அதீத விருப்பம் உண்டாகும்.

ஆனால், இந்த சீசனில் உடல் நலனை பேண சில உணவு மாற்றங்கள் அவசியமாகும்.

குளிர்ந்த நிலையில் உள்ள பால், சாதம் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

இவை ஜீரண சக்தியை பலவீனப்படுத்தும் என்பதால், எப்போதும் புதிதாக சமைத்த சூடான உணவுகளையும், உடலுக்கு கதகதப்பை தரும் சூப் வகைகளையும் உட்கொள்ள வேண்டும்.

அதேபோல், உடல் எடை கூடும் என பயந்து நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை தவிர்க்கக் கூடாது.

குளிர்காலத்தில் வாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சருமம் மற்றும் உட்புற உறுப்புகள் வறட்சியடையாமல் இருக்க உணவில் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்வது அவசியம்.

பரோட்டா, சப்பாத்தி போன்ற உலர்ந்த உணவுகளை மட்டும் அதிகம் உண்ணாமல், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்வது செரிமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

இத்தகைய எளிய மாற்றங்கள் குளிர்கால நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *