நான் ஆரஞ்ச் தொப்பியை எதிர்பார்த்து விளையாடவில்லை – விராட் கோலி!!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

இந்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கெதிராக 49 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 77 ரன்கள் விளாசினார்.

இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அத்துடன் 50 ரன்களுக்கு மேல் 100 முறை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

போட்டி முடிந்த பின் விராட் கோலி பேசும்போது கூறியதாவது:-

டி20 கிரிக்கெட் என வரும்போது உலகின் பல்வேறு இடங்களில் போட்டியை விளம்பரப்படுத்துவற்கு என்னுடைய பெயர் இணைக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியும். நான் இன்னும் அதை பெற்றுள்ளேன் என யூகிக்கிறேன்.

நான் ஆரஞ்ச் தொப்பியை எதிர்பார்த்து விளையாடவில்லை. இந்த உறுதியை என்னால் உறுதியாக கொடுக்க முடியும். என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். நான் அணிக்கு அட்டகாசமான அதிரடி தொடக்கம் கொடுக்க முயற்சி செய்தேன். விக்கெட் வீழ்ந்தால் அதற்கு ஏற்ப மதிப்பீடு செய்ய வேண்டும். இது வழக்கமான பிளாட் பிட்ச் அல்ல. போட்டியை முடித்துக் கொடுக்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது. பந்து அடிக்கக்கூடிய ஸ்லாட்டில் விழுந்தது. ஆனால், டீப் பாய்ன்ட் பகுதிக்கு சென்று விட்டது.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *