மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து களம் இறங்கினார். இந்த ஜோடி மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 76 (3) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை பெற போபண்ணா ஜோடிக்கு ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் தேவைப்பட்டது.
போபண்ணா ஜோடி காலிறுதியில் ஜான் பாட்ரிக் (ஆஸ்திரேலியா)- செம் வீர்பீக் (நெதர்லாந்து) ஜோடியை எதிர்கொள்கிறது.
போபண்ணா ஜோடி இந்த போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்டது. முதல் செட்டில் 6-5 என முன்னிலையில் இருந்தபோது இரண்டு பிரேக் பாயின்ட்ஸ்களை சேவ் செய்ததன் மூலம் 7-5 என முதல் செட்டை கைப்பற்றியது.
2-வது செட்டில் 6-6 என சமநிலை பெற்றதால் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் எதிர்ஜோடி டபுள் ஃபால்ட்-க்கு உட்பட்டதால் போபண்ணா ஜோடி முன்னிலை பெற்று 7-6(3) என கைப்பற்றியது.