‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு – தணிக்கை வாரியம் அந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது!!

சென்னை:
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்த தணிக்கை வாரியம் அந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.


இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, பாதுகாப்பு படை தொடர்பான சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், அதுகுறித்து ஆய்வு செய்ய பாதுகாப்பு துறை நிபுணர்களை நியமிக்க வேண்டியதுள்ளது. தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டு மறுஆய்வுக்கு அனுப்பியது தவறானது என்று தெரிவித்துள்ளது. ஜன நாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, ஐகோர்ட் நீதிபதி P.T.ஆஷா உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.


மத்திய தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *