பிசிசிஐ-யின் பெண்கள் பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 4-ந்தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ஆர்சிபி 198 ரன்கள் குவித்தது. பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் முன்னணி வீராங்கனையான சமரி அட்டப்பட்டுக்கு அவுட் கொடுத்த விதம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்சிபி அணியின் வலது கை லெக் ஸ்பின்னரான வரேஹாம், வீசிய பந்தை இடது கைது பேட்டரான சமரி அட்டப்பட்டு எதிர்கொள்வார். டாஸ்அப்-ஆக தூக்கிப்போட்ட பந்தை சமரி அட்டப்பட்டு முன்னாள் முட்டி போட்டு அடிக்க முயற்சிப்பார். அப்போது பந்து அவரின் வலது கால் ஷூவில் படும்.
ஆர்சிபி வீராங்கனைகள் நடுவரிடம் அவுட் கேட்க, அவர் மறுத்து விடுவார். இதனால் ரிவியூ கேட்பார் ஆர்சிபி கேப்டன் மந்தனா.
அப்போது வரேஹாம் லெக்சைடு பந்து நன்றாக சுழன்று செல்லும்படி பந்தை சுழற்றி விடுவார். பந்து லெக்சைடு ஸ்டம்புக்கு வெளியில் பிட்ச் ஆவது போல் இருக்கும். ஆனால் HawkEye ரீ-பிளேயில் பந்தை லைக் ஸ்டம்புக்கு நேராக பிட்ச் ஆகும்.
பிட்ச் ஆன பிறகு லெக் ஸ்டம்பிற்கு வெளியில் செல்வது போல்தான் இருக்கும். ஆனால் ஹூக்ளி பந்து போன்று பிட்ச் ஆன பிறகு ஆஃப்சைடு திரும்பி லெக்ஸ்டம்ப் மற்றும் மிடில் ஸ்டம்பிற்கு இடையில் தாக்குவதுபோல் HawkEye காட்டும். இதனால் 3-வது நடுவர் விக்கெட் கொடுத்துவிடுவார்.
இதை சமரி அட்டப்பட்டு சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்னங்க இது… என தனது பேட் மூலம் சைகை காட்டுவார். அதன்பின் பரிதாபமாக வெளியேறுவார். இதை உ.பி. வாரியர்ஸ் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தெளிவாக லெக் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்து எப்படி ஸ்டம்பை தாக்கும் என விமர்சனம் செய்தனர். ஒரு ரசிகர் இது பெண்கள் பிரீமியர் லீக்கின் லைவ் பிக்சிங் என தெரிவித்துள்ளார்.
எல்.பி.டபிள்யூ விவகாரத்தில் ஏற்கனவே டிஆர்எஸ் சிஸ்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது இந்த விமர்சனமும் இணைந்துள்ளது.