நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம்..!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு கவனம் பெற்று வருகிறது நாம் தமிழர் கட்சி. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019, 2021-ல் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயம் சின்னம் ஒதுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் சீமான் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இதனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் புதிய சின்னம் ஒன்றை தேர்வு செய்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர். முதல் கட்டமாக ஆட்டோ சின்னத்தை கேட்டது நாம் தமிழர் கட்சி. ஆனால் வேறு ஒரு கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க மீண்டும் ஏமாற்றமடைந்தார் சீமான்.

இந்நிலையில் கப்பல், படகு, மைக், தீப்பெட்டி, ஜன்னல், செருப்பு உள்ளிட்ட பல சின்னங்களை சீமான் தரப்பு பரிசீலனை செய்தது. இதில் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு “மைக்” சின்னத்துக்கு பதிலாக வேறொரு சின்னம் ஒதுக்க கோரிய நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்க கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருந்தார்.

இறுதியில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் உறுதியானது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *