இந்தியாவின் முதல் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் பா.ஜ.க.வில் இணைந்தார்!!

ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடகப் பதிவில்,

ஹிசார் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 10 ஆண்டு காலம் இருந்திருக்கிறேன். அரியானா மாநில அமைச்சராக சுயநலமின்றி சேவை செய்திருக்கிறேன். ஹிசார் மக்கள் எனது குடும்பத்தவர்கள். எனது குடும்பத்தின் ஆலோசனையின்பேரில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சாவித்ரி ஜிண்டாலின் மகனும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். இதையடுத்து, அவர் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நவீன் ஜிண்டாலின் விலகலை அடுத்து 84 வயதாகும் அவரது தாய் சாவித்ரி ஜிண்டாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

இந்தியாவின் முதல் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால். உலகின் 50-வது மிகப் பெரிய பணக்காரராகவும் ஜிண்டால் இருந்து வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். ஹிசார் தொகுதியில் நடந்த பா.ஜ.க.வின் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் மற்றும் பிற பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையில் சாவித்ரி ஜிண்டால் பா.ஜ.க.வில் இணைந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *