முற்​றி​லும் வேறு​பட்ட ரொமான்டிக் காமெடி கதையில் சாந்தனு!!

சென்னை:
சாந்தனு பாக்​ய​ராஜ் நடிக்​கும் ‘மெஜந்​தா’ ரொமான்​டிக் காமெடி கதை​யாக உரு​வாகிறது என படக்​குழு தெரிவித்துள்​ளது. இதில் அஞ்​சலி நாயர் நாயகி​யாக நடித்துள்​ளார்.

அர்ச்​சனா ரவிச்​சந்​திரன், ஆர்ஜே ஆனந்​தி, படவா கோபி, சரத் ரவி, சவுந்​தர்யா பிரியன் உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

பரத் மோகன் இயக்​கும் இந்​தப் படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் டாக்​டர் ஜேபி லீலா​ராம், ரேகா லீலா​ராம் மற்​றும் ராஜு வழங்​கு​கின்​றனர்.

தரண் குமார் இசை அமைக்​கும் இந்​தப் படத்​துக்​குப் பல்லு ஒளிப்​ப​திவு செய்​கிறார். இப்​படத்​தின் டீஸர் இப்போது வெளி​யாகி இருக்​கிறது.

“முற்​றி​லும் வேறு​பட்ட சாந்தனுவை இப்​படத்​தில் பார்க்​கலாம். அவர் நடிப்​பும் தோற்​ற​மும் வேறு​வித​மாக இருக்​கும். ரசிகர்​களுக்கு இப்படம் புதிய அனுபவத்​தைக் கொடுக்​கும் என்​பது எங்கள் நம்​பிக்​கை.

படத்​தின் டிரெய்​லர், ஆடியோ மற்​றும் ரிலீஸ் தேதி ஆகியவை விரை​வில் அறிவிக்​கப்​படும்” என படக்​குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *