கிண்​டி​யில் ரூ.417.07 கோடி செல​வில் அமைய​வுள்ள குழந்​தைகளுக்​கான உயர்​ சிறப்பு மருத்​து​வ​மனை ; நாளை அடிக்​கல் நாட்ட உள்​ள முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்!!

சென்னை:
கிண்​டி​யில் ரூ.417.07 கோடி செல​வில் அமைய​வுள்ள குழந்​தைகளுக்​கான உயர்​ சிறப்பு மருத்​து​வ​மனை மற்​றும் ஆராய்ச்சி நிலை​யக் கட்​டிடத்​துக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நாளை அடிக்​கல் நாட்ட உள்​ளார்.

இதற்கான பணிகளை அமைச்சர் மா.சுப்​பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். சுகா​தா​ரத் துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண் தம்​பு​ராஜ் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

அப்​போது, அமைச்​சர் கூறிய​தாவது: கிங் இன்​ஸ்​டிடியூட் வளாகத்​தில் கலைஞர் நூற்​றாண்டு உயர் ​சிறப்பு மருத்துவமனை கட்​டப்​பட்டு பயன்​பாட்​டில் உள்​ளது. அதே மருத்துவமனை வளாகத்​தில் பிரத்​யேக​மாக வயது மூத்​தவர்​களுக்​கான தேசிய முதி​யோர் நல மருத்துவமனை செயல்​படு​கிறது.

இந்த வளாகத்​தில் குழந்​தைகளுக்​கான உலகத்​தரம் வாய்ந்த உயர்​சிறப்பு மருத்துவமனை மற்​றும் ஆராய்ச்சி நிலை​யம் ரூ.417.07 கோடி​யில் அமைய​ உள்​ளது. இதற்கு வரும் 27-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அடிக்​கல் நாட்ட உள்​ளார். மருத்துவமனை 6 தளங்​களைக் கொண்​ட​தாக இருக்​கும்.

மொத்​தம் 4,63,544 சதுர அடி பரப்​பள​வில் மருத்துவமனை 6.5 ஏக்கர் பரப்​பில் அமை​கிறது. இந்த மருத்துவமனையில் அதி நவீன மருத்​துவ வசதி​கள் ஏற்​படுத்​தப்பட உள்​ளன. 18 மாதத்​துக்​குள் மருத்துவமனை கட்டி முடிக்​கப்​பட​வுள்​ளது என்று அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *