ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றி என்றைக்கும் நான் உங்களுக்கு எதிரி இல்லை என்றெல்லாம் சொல்லி… அழுத்தத்திற்கு பயந்து கைகட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார் – விஜயை விமர்சித்த கே.என்.நேரு!!

மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய விஜய், “அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான்” என்று தெரிவித்தார்.


ஜனநாயகம் சென்சார் பிரச்சனை, கரூர் கூட்டநெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை நெருக்கடி குறித்து விஜய் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், திருச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “ஒரு நடிகர் இப்போது கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

அவர் இன்றையைக்கு அவருடைய செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறபோது, ‘அழுத்தத்திற்கு நான் ஒருபோதும் பயப்படமாட்டேன்’ என்று வீரவசனம் பேசியிருக் கிறார். அவர் எப்படி ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

ஒரு சினிமா படம் வெளியாகாமல் போனதற்காக அவரும் அவரது தந்தையும் முதலமைச்சரிடம் கைகட்டி நின்றி என்றைக்கும் நான் உங்களுக்கு எதிரி இல்லை என்றெல்லாம் சொல்லி… அழுத்தத்திற்கு பயந்து கைகட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார்” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *