இனி ஒவ்வொரு தொண்டர்களுக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் – தேர்தல் பிரசாரத்தில் கண் கலங்கிய பிரேமலதா..!

வாணாபுரம் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அவர் பேசும்போது, விஜயகாந்த் மறைவுக்கு நீங்க எல்லாம் வந்திருந்தீங்க. இரண்டு நாள் யாருமே சாப்பிடாமலேயே டிவி முன்பு நீங்கள் காட்டிய அன்பு, பல மடங்கு. கவலைப்படாதீங்க… விஜயகாந்த் விட்டுட்டு போயிட்டாரு என நினைக்காதீர்கள். உங்கள காப்பதற்கு நாங்கள் இருக்கிறோம்.

நான், என் இரண்டு மகன்கள் உங்களுக்காகவே இருப்போம். இனி ஒவ்வொரு தொண்டர்களுக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன். அப்போது கூட்டத்தை பார்த்து பிரமேலதா கண் கலங்கினார்.

ரிஷிவந்தியம் வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.

நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடியவில்லை. எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *