பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்மாக் பணி​யாளர்​கள் 2-வது நாளாக போராட்​டம்!!

சென்னை:
பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்மாக் பணி​யாளர்​கள் 2-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். டாஸ்மாக் தலைமை அலு​வல​கத்தை முற்​றுகை​யிட முயன்​ற​தால் போலீ​ஸார் அவர்​களை கைது செய்​தனர்.

பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு டாஸ்மாக் பணி​யாளர்​கள் சங்​கத்​தினர் (ஏஐடி​யுசி) நேற்று முன்​தினம் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இந்​நிலை​யில், 2-வது நாளாக நேற்​றும் தமிழ்​நாடு டாஸ்மாக் பணி​யாளர்​கள் சங்​கம் (ஏஐடி​யுசி) உடன் இணைந்​து, தமிழ்​நாடு விற்​பனை​யாளர் நல சங்​கம், விடு​தலை சிறுத்​தைகள் பணி​யாளர் சங்​கத்​தினர், எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் தலை​மையகம் அருகே போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இப்போராட்​டத்​தில், 200-க்​கும் மேற்​பட்ட பணி​யாளர்​கள் கலந்​துக் கொண்டு தங்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி கோஷங்​களை எழுப்​பினர்.

குறிப்​பாக, 23 ஆண்​டு​களாக தற்​காலிக​மாக பணி செய்து வரும் தங்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும். கால​முறை ஊதி​யம் வழங்க வேண்​டும்.

காலி பாட்​டில் திரும்​பப் பெறும் திட்​டத்​துக்கு டாஸ்மாக் பணி​யாளர்​களை பயன்​படுத்​தாமல், மாற்று வழி​யில் நடை​முறைப்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தினர்.

பின்​னர், டாஸ்மாக் தலைமை அலு​வல​கத்தை முற்​றுகை​யிட முயன்ற போது காவல்​துறை​யினர் அவர்​களை கைது செய்​தனர்.

முன்​ன​தாக போராட்​டத்​துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன் செய்​தி​யாளர்​களிடம் கூறுகையில், ‘‘டாஸ்மாக் பணி​யாளர்​களின் கோரிக்கை மிக​வும் நியாய​மானது.

இந்​தக் கோரிக்​கைகள் எல்​லாம் உழைக்​கும் மக்​களின் உரிமை. இது அரசுக்கு எதி​ரான போராட்​டம் கிடை​யாது.

தமிழக அரசு போராடும் இந்த அனைத்து பிரிவு தொழிலா​ளர்​களை​யும் அழைத்து பேசி அவர்​களின் கோரிக்​கைகளை தீர்த்​து வைக்​க வேண்​டும்’’ என்றார்.

முதல்வர் தலையிட வலியுறுத்தல்: ​விசிக தலை​வர் திரு​மாவளவன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், மார்க்​சிஸ்ட்​-லெனினிஸ்ட் மாநில செய​லா​ளர் பழ.ஆசைத்​தம்பி ஆகியோர் வெளி​யிட்ட கூட்​டறிக்​கையில், கடந்த அதி​முக ஆட்​சி​யில் டாஸ்மாக் பணி​யாளர்​கள் அலட்​சி​யப்​படுத்​தப்​பட்​டனர்.

அவர்​களது பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​பட​வில்​லை.

புதிய அரசு அக்​கோரிக்​கைகளை நிறைவேற்​றும் என்ற நம்​பிக்​கையோடு காத்​திருந்​தனர். ஆனால், அது​வும் நிறைவேற்​றப்​பட​வில்​லை.

இதனால், தற்​போது பணி​யாளர்​கள், கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொடர் போராட்​டங்​களில் ஈடுபட வேண்​டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

போராடும் டாஸ்மாக் பணி​யாளர்​கள் உள்​ளிட்ட அனைத்து பிரிவு பணி​யாளர்​களின் கோரிக்​கைகள் மீது முதல்​வர் நேரடி​யாக தலை​யிட்​டு, சுமூக தீர்​வு காண முன்​வர வேண்​டும்​ என தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *