இந்​தியா – அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்பந்தப் பேச்​சு​வார்த்தை 99% நிறைவடைந்​துள்​ள​தாக மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் தகவல்!!

புதுடெல்லி:
இந்​தியா – அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்பந்தப் பேச்​சு​வார்த்தை 99% நிறைவடைந்​துள்​ள​தாக மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் கூறி​னார்.

இந்​தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பான பேச்​சு​வார்த்தை பல மாதங்​களாக நடை​பெற்று வருகிறது.

இதில் முதல்​கட்​ட​மாக ஒரு இடைக்​கால ஏற்​பா​டாக இரு தரப்​புக்​கும் இடையே தற்​காலிக வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்படுத்தப்படும் என்​றும் பிறகு நிரந்தர வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்​றும் இரு நாடு​களும் அறி​வித்​தன.

இந்​நிலை​யில் இந்​தியா – அமெரிக்கா இடையி​லான இடைக்​கால வர்த்தக ஒப்​பந்த பேச்​சு​வார்த்தை டெல்​லி​யில் நேற்று தொடங்கியது.

வரும் 4-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தப் பேச்​சு​வார்த்​தை​யில் அமெரிக்கா சார்​பில் பிரெண்​டன் லிஞ்ச் தலை​மையி​லான வர்த்​தகப் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​றுள்​ளனர்.

இந்​தியா சார்​பில் மத்​திய வர்த்​தகத் துறை செய​லா​ளர் தர்​பன் ஜெயின் தலை​மையி​லான குழு பங்​கேற்​றுள்​ளது.

இதுகுறித்து மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று கூறுகை​யில், ‘‘இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதல்​கட்​டத்தை இறுதி செய்​யும் நிலைக்கு நெருங்கி​விட்​டன.

இது தொடர்​பான 99% விவாதங்​கள் ஏற்​கெனவே முடிந்து விட்​டன. சிறிய அளவி​லான பிரச்​சினை​களுக்கு தற்​போது தீர்வு காணப்​பட்டு வரு​கிறது.

அமெரிக்கா​வுட​னான முதலா​வது இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாக இருப்​பதை இந்​தியா மிக விரை​வில் அறிவிக்​கும்.

மேலும், இந்த ஒப்​பந்​தம் முடிவடைந்த பிறகு, இரண்​டாம் கட்டத்துக்​கான பேச்​சு​வார்த்​தைகள் தொடங்​கும்’’ என்​றார்.

சந்தை அணுகல், வரி அல்​லாத நடவடிக்​கைகள், சுங்​கம், வர்த்தக வசதி, முதலீட்டு ஊக்​கு​விப்​பு, பொருளா​தா​ரப் பாது​காப்பு ஒருங்கி ணைப்பு போன்ற பல்​வேறு அம்​சங்​கள் இந்​தப் பேச்​சு​வார்த்​தை​யில் இடம் பெற்​றுள்​ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *