துளசிதாசர் எழுதிய ஸ்ரீராம் சரிதம் என்ற ராமாயண கதையை 522 தங்க தகடுகளில் எழுதி உள்ளார் உம்மடி பங்காரு நகைக்கடையின் நிர்வாக பங்குதாரர் அமேந்திரன் உம்மிடி. இந்த 522 தங்க தகடுகளையும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராம பக்தரான லஷ்மி நாராயணன் என்பவர் இராமாயண கதையை காலம் கடந்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்து இருந்த நிலையில் தீவிரமான ஆராய்ந்து தாமரை தட்டில் தங்க முலாம் பூசி ராமாயண கதையின் எழுத்துக்களை பொறிக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் ஒரு மில்லி மீட்டர் தடிமன் உள்ள இந்த தகட்டின் இரண்டு பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது .
147 கிலோ கொண்ட ராமாயண கதையை உள்ளடக்கிய தகடுகளை செய்ய சுமார் 8 மாதங்கள் ஆகினவாம். ராமாயணத்தை சுமந்து செல்லும் இந்த தங்க தகடுகள் வருகிற 8ம் தேதி அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகவும் ராமநவமி அன்று கோவில் கருவறைக்கு ராம பக்தர் லட்சுமி நாராயணன் இதை அர்ப்பணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.