மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆழி’. இதில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்.
பிப்.27-ல் வெளியாகும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்தப் படத்தின் கதை மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறுகிறது. பெரும்பாலும் கடல்தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்து வீர்கள் என இயக்குநரிடம் கேட்டேன்.
அது குறித்து முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது.
ஒரு மீன்பிடி கப்பல் ஒன்றை அரங்கத்துக்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தினார்.
இந்தப் படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். நெகட்டிவ் கேரக்டருக்கு தான் இன்று வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது.
இப்போதெல்லாம் தப்பு செய்பவர்தான் கதாநாய கன். புஷ்பா படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார்.
ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது” என்றார்.