தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் !!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பின் 13 துறைகளை உள்ளடக்கியது. மெட்ரோ இரயில் செயல்பாடுகள், மெட்ரோ இரயில், மேல்நிலை உபகரணங்கள், சிக்னலிங், தொலை தொடர்பு, கட்டுமானம், வழித்தடங்கள், மின்சாரம் மற்றும் பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் நிர்வாகம், பாதுகாப்பு, தானியங்கி கட்டண சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறும் வசதி தடைபட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. கோளாறை சரிசெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ரயில் நிலைய கவுன்ட்டர்களில் சென்று டிக்கெட் பெற்று கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *