சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு இணையும் படத்தில் ரம்யா நம்பீசன்!!

சென்னை:
சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு இணையும் படத்தில் ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால், படத்தின் கிராபிக்ஸ் பணிகள், நடிகர்கள் ஒப்பந்தம், படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

இதில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார். அவருடன் இணைந்து ரம்யா நம்பீசனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது இணையத்தில் தகவலாக வெளியானது. அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தனது அடுத்த படம் என்று உறுதிப்படுத்தியுள்ளார் ரம்யா நம்பீசன்.

தற்போது ‘சேயோன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதனை ஒரே கட்டமாக முடித்துவிட்டு, வெங்கட்பிரபு படத்தினை தொடங்க முடிவு செய்துள்ளார்.

இதில் நடித்துக் கொண்டே ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *