திருப்​பதி தேவஸ்​தானத்​தில் கடந்த ஆட்​சி​யில் 60 லட்சம் லிட்​டர் நெய்​யில் கலப்​படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்​களை விநி​யோகம் செய்​த​தாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு குற்றச்சாட்டு!!

அமராவதி:
திருப்​பதி தேவஸ்​தானத்​தில் கடந்த ஆட்​சி​யில் 60 லட்சம் லிட்​டர் நெய்​யில் கலப்​படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்​களை விநி​யோகம் செய்​த​தாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு குற்​றம்​சாட்​டி​னார்.

ஆந்​திர பேர​வை​யில் பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் நேற்று காலை திருப்​பதி ஏழு​மலை​யான் கோயிலில் கடந்த ஜெகன் ​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சி​யின்​ போது நெய்​யில் கலப்​படம் என்று தெரிந்தே வாங்​கிய​தாக தீவிர குற்றச்சாட்​டு​கள் முன் வைக்​கப்​பட்​டன. இதன் மீது சுமார் 3 மணி நேரம் விவாதம் நடை​பெற்​றது.

இதில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: கலப்பட நெய் விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு விசா​ரணையை நடத்​தி​யது. அக்​குழு​வினர் விசா​ரணை நடத்​தி, அதி​காரி​கள், ஊழியர்​கள், நிபுணர்​கள் என அனை​வரும் சேர்ந்தே இந்த தவறை செய்​தனர்.

ஆதலால் அவர்கள் மீது ஆந்​திர அரசு தரப்​பில் நடவடிக்கை எடுக்​கலாம் என எனக்கு பரிந்​துரை செய்​தது.

இதனை விசா​ரிக்​கவே ஒரு நபர் விசா​ரணை கமிஷன் தற்​போது அமைக்​கப்​பட்​டுள்​ளது. முந்​தைய ஆட்​சி​யினர் லட்டு விவகாரத்தில் மட்​டுமல்​லாது பல விஷ​யங்​களில் தவறிழைத்துள்ளனர்.

2019- 24ம் ஆண்டு இடையே மட்​டும் முந்தைய அரசு 59.71 லட்​சம் லிட்​டர் கலப்பட நெய்யை வாங்கி உபயோகித்​துள்​ளது. இதில் ரூ.231.51 கோடி ஊழல் நடந்​துள்​ளது.

லட்டு தயாரித்த நெய்​யில் விலங்​கு​களின் கொழுப்​பு, மீன் கொழுப்பு ஆகியவை கலந்​திருப்​ப​தாக நானாக கூற​வில்​லை. என்டிடிபி கொடுத்த அறிக்​கையை ஆதா​ர​மாக கொண்டு அந்த விஷ​யத்தை வெளி​யில் கூறினேன்.

கடவுள்​தான் என்னை அப்​படி சொல்ல வைத்​துள்​ளார். கொல்​கத்​தா​வின் போலே​பாபா டயரிதான் அனைத்து தவறுகளை​யும் செய்​தது.

திண்​டுக்​கல் ஏஆர் டயரி ஃபுட்​ஸ், திருப்​பதி ஸ்ரீவைஷ்ணவி டயரி, நெல்​லூர் மால் கங்கா மில்க் டயரி ஆகிய​வற்​றின் பெயர்​களில் நெய் விநி​யோகம் செய்​யப்​பட்​டது.

இதில் லஞ்​சம் வாங்​கிய முன்னாள் அறங்​காவலர் குழு தலை​வர் ஒய்​.​வி. சுப்​பாரெட்​டி​யின் உதவி​யாளர் சின்​னப்பா கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

இவ்​வளவு நடக்​கும்​போது அப்​போதைய தேவஸ்​தான அறங்​காவலர், நிர்​வாக அதி​காரிக்கு தெரி​யாமல் நடக்​கு​மா? இவ்​வாறு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசினார்.

துணை முதல்​வர் பவன் கல்​யாண் பேசி​ய​தாவது: கலப்பட நெய்​யில் எந்த ரசாயனத்தை கலந்​தார்​களோ அது பெருமாளுக்கே வெளிச்​சம். நெய்​யில் விலங்கு கொழுப்பு கலந்திருந்​தது என்​பது என்​டிடிபி கொடுத்த அறிக்​கை​யில் இருந்தது. அது நெய்யே இல்லை என சிபிஐ அறிக்கை கொடுத்துள்ளது.

அப்​போதைய அறங்​காவலர் குழு மீது குற்​றம் சுமத்​தி​னால் முன்னாள் முதல்​வர் ஜெகன் ஏன் மல்லு கட்​டு​கிறார் ? அப்படியெனில் அதில் அவருக்​கும் பங்கு இருக்​கிறது என்​பது உண்மை​ தானே ? கலப்பட நெய் விவ​காரத்​தில் தவறு செய்தவர்கள் யாராக இருப்​பினும் தண்​டிக்​கப்பட வேண்டியவர்களே. இவ்​வாறு பவன் கல்​யாண் பேசி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *