திமுக கூட்டணிக்கு நாங்கள் வந்ததால் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு இல்லை – பிரேமலதா சொல்கிறார்!!

சென்னை:
திமுக கூட்டணிக்கு நாங்கள் வந்ததால் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் கோயிலில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

பின்னர், பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி வெற்றி பெறும்.

தேமுதிக வருகையால் கூட்டணி கட்சிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. அனைவரும் மகிழ்ச்சியாக, ஒற்றுமையுடன் இருக்கிறோம். ஒரிரு நாட்களில் யார், யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்தந்த தொகுதிகள் என்பது தெரியவரும். பின்னர், வேட்பாளர்களை அறிவிப்போம்‌.

நானும், விஜய பிரபாகரனும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தொண்டர்கள் விரும்புகின்றனர்.

விரைவில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் யார், யார் வேட்பாளர்கள் என்பதை அறிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *