கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி விடுமுறை..!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடையும்.

மேலும் வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட இருக்கிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 1000க்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த கடைகள் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் மூடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் கூறுகையில், கோயம்பேடு சந்தை பணியாளர்களும் எந்தவிதமான தடையுமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி காய்கறி மற்றும் உணவு தானிய வளாகம் ஆகியவற்றிற்கு முழு விடுமுறை விடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும் 19-ந்தேதி பூ மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று பூ வியாபாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *