”ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்ததாலேயே என்னை குற்றவாளி எனச் சொல்ல முடியாது” – இயக்குநர் அமீர் பேட்டி!!

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் இயக்குநர் அமீர் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் அமீர் , போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளேன்; என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள நேரம் வேண்டும் ஜாபர் சாதிக் உடன் பயணித்தவன் என்ற முறையில் என் மீது சந்தேக நிழல் விழுவதில் தவறில்லை; நான் எங்கும் ஓடி ஒளியவோ, மறைந்து கொள்ளவோ தேவை ஏற்படவில்லை; ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்ததாலேயே என்னை குற்றவாளி எனச் சொல்ல முடியாது . விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது. விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது.

என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை… இஷ்டத்திற்கு சொல்லப்படும் கதைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வரும். இது குறித்து ஒருநாள் பேசுவேன் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *