பாஜக​வில் எனக்கு எந்த பொறுப்​பும் வழங்​க​ வில்​லை; கட்​சி​யில் ஒரு பொறுப்பு இருந்​தால் மட்​டுமே என்​னால் முழு​மை​யாகச் செயல்பட முடி​யும் – சரத்குமார் !!

சென்னை ;
பாஜக​வில் எனக்கு எந்த பொறுப்​பும் வழங்​க​ வில்​லை. பொறுப்​பு​கள் இல்​லாமல் தேர்​தல் களத்​தில் எப்​படி பணி​யாற்​ற முடியும் என நடிகர் சரத்​கு​மார் கேள்வி எழுப்பி உள்​ளார்.

சென்னை தி.நகரில் பாஜக நிர்​வாகி நடிகர் சரத்​கு​மார் தலை​மை​யில் அவரது ஆதரவாளர்​கள் கூட்​டம் நேற்று நடந்​தது.

இந்த கூட்​டத்​தில், அகில இந்​திய சரத்​கு​மார் தலைமை ரசிகர் நற்​பணி மன்​றம், நாட்​டாமை குடும்​பத்​தினர், சுப்​ரீம் ஸ்டார் பேரவை நிர்​வாகி​கள், உறுப்​பினர்​கள் கலந்து கொண்​டனர்.

கூட்​டத்​துக்​குப் பின் செய்​தி​யாளர்​களிடம் சரத்​கு​மார் கூறிய​தாவது: இந்​தச் சந்​திப்​பில் நிர்​வாகி​கள் தங்​கள் ஆதங்​கத்தை வெளிப்​படுத்​தினர்.

குறிப்​பாக, பாஜக​வில் எனக்கு இது​வரை எந்​தப் பொறுப்​பும் வழங்​கப்​ப​டாதது குறித்து அவர்​கள் கேள்வி எழுப்​பினர்.

தேர்​தல் நெருங்​கும் வேளை​யில், உரிய பொறுப்​பு​கள் இல்​லாமல் எப்​படித் தேர்​தல் களத்​தில் பணி​யாற்ற முடி​யும் என்​பதே அவர்​களின் பிர​தான கேள்​வி.

எங்​கள் மாநில நிர்​வாகி​களுக்கு பொறுப்​பு​கள் வழங்​கப்​பட்​டுள்ளன என்​பதை நான் மறுக்​க​வில்​லை.

அதே​நேரத்​தில், ‘தலை​வருக்கே (சரத்​கு​மார்) பொறுப்பு இல்​லாத​போது, எங்​களுக்கு மட்​டும் பொறுப்​பு​கள் இருந்து என்ன பயன்?’என்ற கருத்தை நிர்​வாகி​கள் அழுத்​த​மாகப் பதிவு செய்​துள்​ளனர். கடந்த 2024 மார்ச் 12-ம் தேதி நாங்​கள் பாஜக​வில் இணைந்​தோம்.

தேசிய அளவில் எனக்கு முக்​கியப் பொறுப்பு வழங்​கப்​படும் என்று அப்​போது உறு​தி​யளிக்​கப்​பட்​டது.

ஆனால், தற்​போது வரை எந்த பொறுப்​பும் வழங்​கப்​பட​வில்​லை. கார் ஓட்​டத் தெரிந்​தும், ஓட்​டுநர் உரிமம் இருந்​தும், காரை ஓட்ட அனு​ம​திக்​க​வில்லை என்​றால் அதில் என்ன நியா​யம் இருக்​கிறது? கட்​சி​யில் ஒரு பொறுப்பு இருந்​தால் மட்​டுமே என்​னால் முழு​மை​யாகச் செயல்பட முடி​யும்.

திருச்சி மாநாட்​டில் எனது புகைப்​படம் கூட மேடை​யில் இடம்​பெறாதது நிர்​வாகி​களிடையே மிகுந்த வேதனையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

பாஜக​வில் பொறுப்பு வழங்க வேண்​டும் என்ற எங்​களது கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, பாஜக மாநிலத் தலை​வருக்​கும், தேசி​யத் தலை​மைக்​கும் கடிதம் அளிக்​க​வுள்​ளேன்.

தலைமை எங்​களது நியாய​மான கோரிக்​கைகளுக்​குச் செவி​சாய்க்​கும் என்ற நம்​பிக்கை இருக்​கிறது.

ஒரு​வேளை பொறுப்​பு​கள் வழங்​கப்​பட​வில்லை என்​றால், மீண்​டும் ஒரு செய்​தி​யாளர் சந்​திப்பை நடத்தி எனது அடுத்​தகட்ட நிலைப்​பாட்டை அறி​விப்​பேன்.

தற்​போதைய சூழலில் சமத்​துவ மக்​கள் கட்​சியை மீண்​டும் தொடங்​கும் எண்​ணம் எனக்கு இல்​லை.

அதே​போல், நடை​பெறவுள்ள தேர்​தலில் நானும், எனது மனைவி ரா​தி​கா​வும் போட்​டி​யிடப் போவ​தில்​லை. தற்​போது வரை பாஜக எத்​தனை இடங்​களில் போட்​டி​யிடு​கிறது என்ற தெளிவு கூட இல்​லை. இவ்​வாறு அவர்​ கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *