எனது போலி ஆபாச படங்கள் இணையத்தில் ஊடுருவி கிடப்பதைக் கண்டு மனம் வலிக்கத்தான் செய்கிறது – ஜான்வி கபூர்!!

சென்னை:
முன்னாள் கனவு கன்னி மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

‘தேவரா’ என்ற தெலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவிலும் கால் பதித்துள்ளார்.

ஜான்வி கபூரை விரைவில் தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னணி இயக்குனர்கள் 2 பேர் அவரிடம் கதை சொல்லி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையில் ஆபாச இணையதளத்தில் தனது புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு ஜான்வி கபூர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் கூறும் போது, “நான் பள்ளிக்கூடம் படித்த காலத்தில் ஆண் நண்பர்கள் சிலர் ஆபாச இணையதளத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அதில் எனது புகைப்படமும் இருந்ததை கண்டு அதிர்ந்து போனேன். இதனால் குழப்பத்தில் தவித்தேன்.

இன்றளவும் எனது போலி ஆபாச படங்கள் இணையத்தில் ஊடுருவி கிடப்பதைக் கண்டு மனம் வலிக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் அமைதியின்றியும் தவிக்கிறேன்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். அப்போதுதான் பிரபலங்கள் நிம்மதியாக இருக்க முடியும்”, என்று குறிப்பிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *