கிட்டத்தட்ட 3 ஆயிரம் குல தெய்வங்கள் கோவில்களுக்கு மேல் இருக்கும்!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடு செய்வது விசேஷமாக நடைபெறும். இதற்காக அன்று இந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல சாஸ்தா கோவில் இருக்கும், அந்தக் குடும்பத்திற்கென ஒரு குலதெய்வமும் இருக்கும். பெரும்பாலும் சாஸ்தா கோவில்கள் ஒவ்வொரு சாஸ்தா பெயரிலும் தனித் தனியாக இருக்கும்.

குல தெய்வங்கள் அந்த சாஸ்தா கோவில்களில் பரிவார தெய்வங்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கும்.


சில குடும்பங்களுக்கு எல்லை காவல் தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும். சில குடும்பங்களுக்கு அந்த ஊரின் பிரதான தெய்வங்களான சிவன், முருகன், அம்பாள், விஷ்ணு போன்ற தெய்வங்கள் குல தெய்வங்களாக இருக்கும்.

பெரும்பாலும் இந்த சாஸ்தா கோவில்களும், குல தெய்வ கோவில்களும் ஊருக்கு வெளியே எல்லைப்பகுதியிலும், ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும், மலை அடிவாரத்திலும், மலைமீதும், வனப்பகுதியிலும் என அமையப்பெற்றிருக்கும்.

பங்குனி உத்திரம் அன்று தவறாமல் இப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் இந்தக் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பணிநிமித்தம் காரணமாக வெளியூர் சென்று குடியிருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடு செய்யத் தவறாமல் தங்கள் சொந்த ஊருக்கு வந்துவிடுகிறார்கள்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.


இதோடு குல தெய்வங்கள் கோவிலையும் சேர்த்து கணக்கிட்டால் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோவில்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *