வங்கத்​தின் மீது கண் வைக்க முயன்​றால், இந்த முறை பாகிஸ்​தான் எத்​தனை துண்​டு​களாக உடை​யும் என்​பது கடவுளுக்கே வெளிச்​சம் – ராஜ்நாத் எச்சரிக்கை!!

புதுடெல்லி:
வரும் காலத்​தில் பாகிஸ்​தானுக்கு எதி​ரான நடவடிக்கை​களில் இந்​தியா ஈடு​பட்​டால் அதற்​குப் பதிலடியாக கொல்​கத்தா மீது தாக்​குதல் நடத்​து​வோம் என்று அந்​நாட்டு பாதுகாப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப் சில தினங்​களுக்கு முன்பு எச்சரித்​திருந்​தார்.

இதற்கு பதிலடி தரும் வகை​யில், மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் அளித்த பேட்​டி​யில் கூறும்​போது, “பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் ஆத்​திரமூட்​டும் வகையி​லான இந்த அறிக்​கையை வெளி​யிட்​டிருக்​கக் கூடாது.

55 ஆண்​டு​களுக்கு முன்பு பாகிஸ்​தான் இரண்டு துண்டுகளாகப் பிரிந்​த​போது அவர்​கள் அதன் விளைவுகளை அனுப​வித்​தனர்.

இப்போது அவர்​கள் வங்கத்​தின் மீது கண் வைக்க முயன்​றால், இந்த முறை பாகிஸ்​தான் எத்​தனை துண்​டு​களாக உடை​யும் என்​பது கடவுளுக்கே வெளி்ச்​சம்” என்​றார்.

பாகிஸ்​தான் அமைச்​சரின் எச்​சரிக்​கைக்கு பதில் அளிக்க பிரதமர் நரேந்​திர மோடிக்​குத் துணிச்​சல் இல்லை என்று மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி நேற்று முன்​தினம் விமர்​சித்​திருந்த நிலை​யில், ராஜ்​நாத் சிங் இவ்​வாறு கருத்து தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *