தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகிற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் என தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் கோயம்புத்தூர் ஆவாரம்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விதிகளின் மீறி நேற்று நேரம் தாண்டி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் . இரவு 10.40 மணி வரை பரப்பரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தட்டிக்கேட்ட திமுகவினரை பாஜகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது .
இது தொடர்பாக கோவை பீளமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக், அண்ணாமலை தொடர்ந்து விதிமுறைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.
அத்துடன் பாஜகவினர் தோல்வி பயத்தில் தொடர்ந்து இடையூறு செய்வதாகவும், வெளி மாநிலங்களில் இருந்து ரவுடிகளை இறக்கி உள்ள பாஜக கோவையில் கலவரத்தை தொடர திட்டமிட்டு இருப்பதாகவும் திமுக வேட்பாளர் ராஜ்குமார் புகார் அளித்துள்ளார்.
வீடியோ ஆதாரத்துடன் அண்ணாமலை மீது திமுக புகார் அளித்துள்ள நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் விதிகளை மீறி பிரசாரம் செய்த அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியைக் கடந்து பாஜக வேட்பாளர் அண்ணா மலை பிரசாரம் மேற்கொண்டார். இதனை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டுள்ளது.
அத்துடன் திமுகவினரை தாக்கிய பாஜகவை சேர்ந்த 4 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் , அநாகரிகமாக வசைபடுதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.