எந்த மலை வந்தாலும் சரி, இந்த அண்ணாமலை இல்லை வேறு எத்தனை மலை வந்தாலும் சரி அதிமுகவை எதுவும் செய்ய முடியாது – செல்லூர் ராஜு..!

அதிமுக சார்பில் போட்டியிடும் மதுரை வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இன்னும் ஒரு வாரம் கழித்து ஜூன் 4 ஆம் தேதி அண்ணாமலை எங்கு இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். எந்த மலை வந்தாலும் சரி, இந்த அண்ணாமலை இல்லை வேறு எத்தனை மலை வந்தாலும் சரி அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. அண்ணாமலை அரசியலுக்கு வரும்பொழுது நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றதாக கூறினார்.

அண்ணாமலை பெயர் உள்ளதால் அண்ணாமலை சொல்லித்தான் வந்தது போலவும், ஆண்டவன் சொல்கிறான் அண்ணாமலை செய்றான் என்று சூப்பர் ஸ்டார் படங்களில் தான் சொல்வார். இந்த அண்ணாமலை சூப்பர் ஸ்டார் கிடையாது, அண்ணாமலை பேச்சுக்கு எல்லாம் இடம் கொடுக்க வேண்டியதில்லை.

நான் அவரை பற்றி நிறைய பேசி விட்டேன் அவர் ஏன் இன்னும் பேசுகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அவரை ஏற்கனவே கிழிகிழியென்று கிழித்துவிட்டேன். அவரை பெற்றி பேச விரும்பவில்லை.

அதிமுகவைப் பற்றி பேச எதுவுமே இல்லை. முதல்வர் கூறி இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்? முதலமைச்சர் தான் சொன்னார் அதிமுக மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்று, இன்று அதிமுக அவர்களுக்கு ஆட்டம் காட்டுகிறது. ரோடு ஷோ என்று பாரதப் பிரதமரை அழைத்து வந்து அண்ணாமலை, பாரத பிரதமரின் செல்வாக்கை ஒன்றுமில்லை என்று ஆக்கிவிட்டார்.

பாண்டிபஜாரில் நடைபெற்ற ரோடு ஷோவில் கூட்டம் இல்லை. இன்று தமிழ்நாட்டிலேயே அதிகம் கூட்டம் உள்ள இடம் என்றால் அது பாண்டி பஜார் தான். அந்த பாண்டி பஜாரிலேயே கூட்டம் இல்லை என்றால், அண்ணாமலை எந்த இடத்தில் இருப்பார் என்று அவர்களுக்கு தெரியும்.

நேற்று அமித்ஷா வந்தார் நான் பக்கத்தில் தான் கழக தொண்டர்களை பார்த்து தேர்தல் களம் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அமித்ஷா வழியாக சென்றார். கடைகள் டீ குடித்தவர்கள் கூட எட்டிப் பார்க்கவில்லை.

அவர் மட்டும் கையை காட்டிக் கொண்டு சென்றார். அவர்களால், இங்கே ஒன்று முடியாது அவர்கள் மீது எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். எங்கு பார்த்தாலும் எடப்பாடி பழனிசாமி செல்லும் பொழுது மக்கள் கூட்டமா, அல்லது கடல் அலையா என்ற வகையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

மோடிஜியை காட்டிலும் ரோடு ஷோ நடத்த முடியுமா என்று அண்ணாமலை கேட்டுள்ளார். தெருவெல்லாம் மழை வெள்ளம் போல அதிமுகவிற்கு மக்கள் கூடுகிறார்கள். அப்படி இருக்கும்போது யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதை முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல்வருக்கு கண்டிப்பாக தெரியும் உளவுத்துறை கூறி இருக்கும் என்று அதிமுக 40 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று செய்திகள் சென்றிருக்கும். அதனின் வெளிப்பாட்டில் என்ன பேசுவது என்று தெரியாமல் இதில் போவது பேசி இருப்பார் என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *