வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் ‘THE GOAT’ படத்தின் முதல் பாடலுக்கு நீங்கள் தயாரா? என்று நேற்று பதிவிட்டார்.
படத்தின் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் தற்பொழுது பாடலின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். ‘விசில் போடு’ என பாட்டிற்கு தலைப்பு வைத்துள்ளனர்.
வெங்கட் பிரபு அவரின் எக்ஸ் பக்கத்தில் “இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நம்ம தளபதிக்கு விசில் போடு” என பாட்டின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அப்போஸ்டரில் விஜய் ஒரு விசிலை ஊதியபடி காணப்படுகிறார்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் குரலில், மதன் கார்கி வரிகளில் ‘The GOAT’ படத்தின் விசில் போடு பாடம் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றனர்.