விழுப்புரம் அருகே உள்ள பனையபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சத்தியாம்பிகை உடனுறை நேத்ரானேஸ்வரர் கோவிலில் இன்று காலை 5.30 க்கு சித்திரை தமிழ்வருட பிறப்பை முன்னிட்டு வினாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சத்தியாம்பிகை, நேத்ரானேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 6.10 மணிக்கு கருவறையில் உள்ள நேத்ரானேஸ்வரர் மீது சூரிய ஒளி பட்டு சூரியன் வழிபாடு நடந்தது. பின்னர் சூரிய ஒளி அருகிலுள்ள சத்தியாம்பிகை சன்னதியிலுள்ள அம்மன் மீது ஒளி பட்டு சூரிய வழிபாடு நடந்தது.
சூரியன் வழி பட்ட பிறகு சிறப்பு மகா தீப ஆராதனை நடந்தது.
பழமை வாய்ந்த இந்த கோவிலில் கண்கள் பார்வை இழந்த சூரியன் நேத்ரானேஸ்வரரை வழிபட்டு மீண்டும் கண் பார்வை தெரிய ஆரம்பித்ததாக வரலாறு உண்டு.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் 1ம் தேதி முதல் 7 ம் தேதி வரை சுவாமி மீது சூரிய ஒளி பட்டு சூரியன் வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கண் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் இந்த கோவிலில் வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.
இந்து அறநிலைய துறை அதிகாரிகள் , கோவில் தர்மகர்த்தாகள், முக்கியஸ்தர்கள் முன்னின்று செய்தனர. கடலுார், விழுப்புரம் , புதுவை உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்தனர் .