சாய் தன்ஷிகாவின் ‘தி புரூப்’ படம் வருகிற மே 3- ந் தேதி அனைத்து தியேட்டர்களிலும் ‘ரிலீஸ்’

2006 – ம் ஆண்டு வெளியான ‘திருடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனம் ஈர்த்தார்.

மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 -ம் ஆண்டு வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்தார். அதன் பின் துல்கர் சல்மானுடன் ‘சோலோ’ என்ற படத்தில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது 3 வருட இடைவெளிக்கு பிறகு ‘தி புரூப்’ என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக தன்ஷிகா நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோ- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ராஷிகா மாஸ்டர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அசோக், ரித்விகா, இந்திரஜா, ருத்வீர் வரதன், மைம் கோபி, ராஜ சிம்மன், அஷ்மிதா, மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். படத்துக்கு ஆர்.கே.தீபக் இசையமைத்துள்ளார். சண்டைக்காட்சிகள் சுரேஷ் ஹார்ஸ் பாபு அமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதனை பிரபல நடிகர் சசிகுமார் இணைய தளத்தில் வெளியிட்டார். இப்படத்தில் ‘ஆக்ஷன் மற்றும் சில நீதிமன்ற காட்சிகள் நிறைந்துள்ளன. தற்போது இந்த ‘டிரெய்லர்’ இணையதளத்தில் வைரலாகியது.

இந்நிலையில் தற்போது ‘தி புரூப்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு தேதியை குறிக்கும் விதமாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

இப்படம் வருகிற மே 3- ந் தேதி அனைத்து தியேட்டர்களிலும் ‘ரிலீஸ்’ செய்யப்படுகிறது. மேலும் இப்படம் தமிழ்,மட்டுமின்றி இந்தி தெலுங்கு மொழிகளிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *