தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது!!

மக்களவைத் தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது.

அறிவுறுத்தலை மீறி பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விதித்துள்ளது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி வாயிலாகவும் பரப்புரை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிந்தவுடன் தொகுதி சாராத வெளியூர் நபர்கள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும், ஹோட்டல்கள் விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்ற நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பான கூட்டம் , ஊர்வலம் நடத்தவோ அதில் வேட்பாளர் பங்கேற்கவும் கூடாது.

இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் திரையரங்குகள் வாயிலாக பரப்புரை செய்யக்கூடாது . விதிமுறைகளை மீறுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *