இந்தியாவின் 18 வது மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் உள்ள 62 தொகுதிகள் என மொத்தம் 12 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசை நின்று வாக்களித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்களுக்கான வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தனது மனைவியுடன் வாக்களிக்க வந்த நிலையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.