புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போலி சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான்பூச்சிகள் என விமர்சனம் செய்ததாக தகவல் வெளியானது.
இளைஞர்கள் குறித்துதான் அவ்வாறு பேசவில்லை என்று அவர் உடனடியாக விளக்கம் கொடுத்து இருந்தார். ஆனாலும் அந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்தநிலையில் சமூக வலைதளத்தில் ஒரு புதிய கட்சிக்கான பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அதுதான் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’. ஆம் ஆத்மியின் சமூக ஊடகப்பிரிவில் இடம்பெற்றிருந்த அபிஜித் தீப்கே, இந்த கட்சியை நிறுவியிருக்கிறார்.
வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று விமர் சித்தநிலையில் இதனை தொடங்கியுள்ளதாக அறிவித் துள்ளார்.