நார்வே செஸ் போட்டி ; கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!!

ஒஸ்லோ:
நார்வே செஸ் போட்டி அந்​நாட்​டின் ஒஸ்லோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 3-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான டி.குகேஷ், பிரான்​ஸின் அலிரேசா ஃபிரோஸ்​ஜாவுடன் மோதி​னார்.

இந்த ஆட்​டம் 31-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதையடுத்து நடை​பெற்ற ஆர்​மகெ​டான் சுற்​றில் அலிரேசா ஃபிரோஸ்ஜா வெற்றி பெற்​றார்.

மற்​றொரு இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான இந்​தி​யா​வின் ஆர்.பிரக்ஞான ந்தா, உலகின் முதல் நிலை வீர​ரான மேக்​னஸ் கார்ல்​சனுடன் மோதி​னார். இதில் 46-வது நகர்த்​தலின் போது பிரக்​ஞானந்தா வெற்றி பெற்​றார்.

இதன் வாயி​லாக பிரக்​ஞானந்தா முழு​மை​யாக 3 புள்​ளி​களை பெற்​றார். 7 முறை சாம்​பிய​னான கார்ல்​சனுக்கு நடப்பு தொடரில் இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது.

கிளாசிக்​கல் போட்​டி​யில் நார்வே செஸ் தொடரில் மேக்​னஸ் கார்ல்​சனை பிரக்​ஞானந்தா வீழ்த்​து​வது இது 2-வது முறை​யாகும்.

கடந்த 2024-ம் ஆண்டு தொடரிலும் கார்ல்​சனை, பிரக்​ஞானந்தா வீழ்த்​தி​யிருந்​தார். 3 சுற்​றுகளின் முடி​வில் அலிரேசா ஃபிரோஸ்ஜா 7.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார்.

பிரக்​ஞானந்தா 4.5 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தி​லும், அமெரிக்​கா​வின் வெஸ்ஸி சோ 4 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தி​லும், குகேஷ் 3.5 புள்​ளி​களு​டன் 4-வது இடத்​தி​லும் உள்​ளனர்.

ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமர் 3 புள்​ளி​களு​டன் 5-வது இடத்​தி​லும், மேக்​னஸ் கார்ல்​சன் 1.5 புள்​ளி​களு​டன் 6-வது இடத்​தி​லும்​ உள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *