அரசமைப்புச் சட்டத்தைக் பாதுகாக்கவும் அதன் உயிர்மூச்சான சனநாயகத்தை பாதுகாத்திடவும் வாக்களிக்க வேண்டுகிறேன் – திருமாவளவன் !!

அரசமைப்புச் சட்டத்தைக் பாதுகாக்கவும் அதன் உயிர்மூச்சான சனநாயகத்தை பாதுகாத்திடவும் வாக்களிக்க வேண்டுகிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழக வாக்காளர்கள் யாவருக்கும் வணக்கம்.

இன்றைய நாள், நம் எதிர்காலம் குறித்து நமக்கு நாமே தீர்ப்பு எழுதும் நாள்.

சாதி, மத உணர்வுகளைக் கடந்து நாடு, மக்கள், சனநாயகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும்; வேட்பாளர், சின்னம், கட்சி ஆகியவற்றுக்குப் பின்னால் உள்ள கருத்தியலைக் கவனத்தில் கொண்டும் வாக்களிக்க வேண்டும்.

சனநாயகத்தின் காப்பரணாக உள்ள நமது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான அறப்போர்தான் இந்த தேர்தல்.

எனவே, நமது அரசமைப்புச் சட்டத்தைக் காத்திட இந்தியா கூட்டணி களம் காண்கிறது.

அரசமைப்புச் சட்டத்தைக் பாதுகாக்கவும் அதன் உயிர்மூச்சான சனநாயகத்தை பாதுகாத்திடவும் வாக்களிக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *