‘மதுக்​கடையை மூடிவிட்​டோம்’ என்​றார்​கள்; ‘விருத்​தாசலத்​தில் ஒரு கடை​யும் மூடப்​பட​வில்​லை’ – தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமல​தா!!

விருத்தாசலம்:
விருத்​தாசலம் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்​தில் நேற்று தனது பணியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமல​தா தொடங்​கி​னார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விருத்​தாசலத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஒரு மாவட்​டத்தை உரு​வாக்க வேண்​டும் என்​பது தொகு​தி​ மக்​களின் விருப்​பம். முதல்​வரைச் சந்​தித்து விருத்​தாசலத்தை மாவட்​ட​மாக அறிவிக்க கோரிக்கை வைப்பேன்.

‘மதுக்​கடையை மூடிவிட்​டோம்’ என்​றார்​கள். ‘விருத்​தாசலத்​தில் ஒரு கடை​யும் மூடப்​பட​வில்​லை’ என மக்​கள் தெரிவிக்​கின்​றனர். எல்​லாம் கண்​துடைப்​பாக உள்​ளது.

பெண்​கள், குழந்​தைகள் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​படு​கின்​றனர். இவற்றைத் தடுக்க அறிவிக்கப்பட்ட சிங்​கப் பெண் அதிரடிப் படையை விரை​வில் அமைக்க வேண்​டும்.

‘பொறுப்​பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது’ என்​று அமைச்​சர்​கள் கூறுகின்றனர், அவர்​களுக்கு கொஞ்​சம் நாள் அவகாசம் கொடுப்​போம். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *