சென்னை:
‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம்.
‘ஆதித்ய வர்மா’வை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘மகான்’, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்: காளமாடன்’ படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னிணி நடிகராக வளர்ந்து வருகிறார்.
‘பைசன்’ படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து துருவ் விக்ரமின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில், துருவ் விக்ரம் நடிக்கும் 4-வது படத்திற்கான போட்டோஷூட்டின் சில BTS புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ஒரு விளையாட்டு சார்ந்த படத்தில் நடித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தனது அடுத்த படம் விளையாட்டு சார்ந்த படம் அல்ல என்றும், அந்த படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் துருவ் விக்ரம் தெரிவித்தார்.