பருத்தி மீதான 11% இறக்குமதி வரி தற்காலிகமாக ரத்து !!

சென்னை;
பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதால், பருத்தி மீதான 11% இறக்குமதி வரிகளை நீக்க வேண்டும் என ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் , பருத்தி மீதான இறக்குமதி வரிகளை நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்திய ஜவுளித் துறைக்கு உதவியாக பருத்தி மீதான 11 % இறக்குமதி வரிக்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை தற்காலிகமாக விலக்கு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டவே ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *