சென்னையில் 2019-ஐ காட்டிலும் 4% வாக்குகள் குறைந்துள்ளது – ராதாகிருஷ்ணன் பேட்டி!!

சென்னையில் 2019-ஐ விட 4% வாக்குகள் குறைந்துள்ளது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல மக்களவைத் தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தரவில் மிகப்பெரிய மாறுபாடு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 7 மணிக்கு வெளியான வாக்கு சதவிகிதம், நள்ளிரவு 12 மணியளவில் வெளியான தகவலுடன் பெரியளவில் மாறுபட்டது.

தருமபுரியில் இரவு 7 மணிக்கு 75.44% வாக்குபதிவு என கூறப்பட்ட நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு 81.48% என மாற்றம் ஆகியுள்ளது.

தூத்துக்குடியில் இரவு 7 மணிக்கு 70.95% வாக்குபதிவு என கூறப்பட்ட நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு 59.96% என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இரவு 7 மணிக்கு வெளியாகும் வாக்குப்பதிவு விவரம், பெரும்பாலும் 1% முதல் 1.5% வரைதான் மாறுபடும்.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது;100-க்கும் மேற்பட்ட கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகள் குறித்த தரவுகள் பெறப்பட்டுள்ளன; அனைத்து தரவுகளையும் ஆய்வு செய்தே இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் வாக்களிப்பதில் சுணக்கம் உள்ளது; அரசு மேற்கொண்ட முயற்சியால் தான் இந்த அளவிற்காவது வாக்குப்பதிவு நடந்துள்ளது. சென்னையில் 2019-ஐ காட்டிலும் 4% வாக்குகள் குறைந்துள்ளது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *