சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆர்வத் துடன் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மக்கள் அனைவ ருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – டிடிவி தினகரன்!!

40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மக்கள் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மக்கள் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றியை மட்டுமே இலக்காக நிர்ணயித்து தேர்தல் களப்பணியாற்றிய அனைத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மட்டுமல்லாது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவரவர் சார்ந்த கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தோளோடு தோள் நின்று தீவிர களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகள் மற்றும் என் உயிரினும் மேலான கழக தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *