தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் த.மா.கா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி அனைவரும் வாக்களிக்க கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த, அனைத்து வாக்காளர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கும், குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் வெற்றிப் பெற வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது உழைத்த கூட்டணி தொண்டர்களுக்கும் கட்சி தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், நன்றி
தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, லட்சக்கணக்கானோர் அனைத்து ஆவணங்கள் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, காரணம் அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுப்பட்டுள்ளது. விடுப்பட்ட வாக்காளர்கள் ஜனநாயக முறைப்படி தங்கள் உரிமையை, கடமையை செய்ய முடியாமல் போனதற்கு பெருத்த சந்தேகத்தோடு கவலையை தெரிவித்தார்கள். அதனால் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாதாவாறு அவற்றை சரிசெய்து தேர்தல் ஆணையம் கடமையாற்ற வேண்டும்.
அடுத்தகட்டமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற வாக்குபதிவிலும் மக்கள் நல்லவர்களுக்கும், வலிமையான தலைமைக்கும் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.