எதற்காக தயாரிப்பாளர்களுக்கு இத்தனை சங்கங்கள் என்பது கடவு ளுக்கே வெளிச்சம் – நடிகர் விஷால் ஆவேசம்!!

எதற்காக தயாரிப்பாளர்களுக்கு இத்தனை சங்கங்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். உங்கள் அனைவருக்கும் இது வெட்கக்கேடு என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் விஷால் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “ஒருவழியாக கட்டப் பஞ்சாயத்து எந்தவித பயமோ, நெருடலோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா மற்றும் அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பாக இந்த ஆண்டு ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்தில் இருப்பதே அதன் அர்த்தம்.

அன்பான திருச்சி, தஞ்சாவூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களே, கங்காரு நீதிமன்றங்கள் இன்னும் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தியதன் மூலம், ஒரு மிகப்பெரிய தாக்கத்தை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் இது என்னைப் போன்ற ஒரு போராளியுடன் முடிந்து போகும்.

கொஞ்சம் தாமதம் ஆனாலும், உங்களை நான் சட்டத்தின் உதவியுடன் கீழிறக்குவேன். ஏனெனில் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, அவர்கள் யாரும் பொழுதுபோக்குக்காக படம் எடுக்க வரவில்லை என்று நான் நம்புகிறேன். பல்வேறு தயாரிப்பாளர் சங்கங்களுக்கு நன்றி. எதற்காக தயாரிப்பாளர்களுக்கு இத்தனை சங்கங்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். உங்கள் அனைவருக்கும் இது வெட்கக்கேடு.

நடிகர் சங்க பொதுச் செயலாளராகவோ அல்லது ஒரு நடிகனாகவோ அல்லது தயாரிப்பாளராகவோ அல்ல. ஒரு முன்னாள் தயாரிப்பாளரின் மகனாக, வியாழக்கிழமை மாலை, தன்னுடைய குழந்தையை பார்வையாளர்களுக்கு சமர்ப்பிக்க காத்திருப்பது எப்படி இருக்கும் என்பதை பார்த்ததன் மூலம் இதனை எழுதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக விநியோக தொகை பாக்கியை செலுத்தினால்தான் திருச்சி, தஞ்சை மாவட்ட பகுதிகளில் ’ரத்னம்’ படத்தை வெளியிடுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கூறுவதாக நடிகர் விஷால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *