தனுஷ் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்- துஷாரா விஜயன்!!

சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துஷாரா விஜயன். தொடர்ந்து அநீதி என்ற படத்தில் அர்ஜுன் தாசுடன் இணைந்து நடித்திருந்தார்.

இதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் அவரது தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்திலும் துஷாரா விஜயன் பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் தனுஷ் மீது தவறான கிசுகிசுக்களையும் குற்றச்சாட்டுகளையும் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் பொய்யானவை.

தனுஷ் நல்ல ஒழுக்கமான நடிகர். நடிப்பின் மீது அவர் அவ்வளவு பாசத்தை வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *