மன அழுத்தத்தைப் போக்கி, உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் வாழைப்பழம் !!

முக்கனிகளில் பிரபலமான கனி வாழையாக கருதப்படுகிறது. அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியதாக உள்ளது. வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

இரும்புச்சத்து வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை உட்கொள்வதால், ரத்த சோகை நீங்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலையும் சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும். இதனால் தான் விளையாட்டு வீரர்கள் அடிக்கடி வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது, வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன.

உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் பி-6, ரத்தசோகை போன்ற

குறைபாடுகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

தாது உப்புக்களைப் பொறுத்த வரையில், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மெக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

100 கிராம் வாழைப்பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத்துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.

மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

ஒவ்வாமையால் கஷ்டப்படுபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது. இதில் அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான அல்சர் பிரச்சினை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *