‘ஓபன்ஹைமர்’ நிர்வாண காட்சி ஷூட்டிங்கில் ரிப்பேர் ஆன கேமரா!!

ஹாலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சங்கடமான, அதேவேளையில் சுவாரசியமான அனுபவத்தை பிரபல நடிகை ‘ஃப்ளோரன்ஸ் பியூ’ பகிர்ந்துள்ளார்.


இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், சிலியன் மரஃபி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்தில், ஜீன் டாட்லாக் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஃப்ளோரன்ஸ் பியூ நடித்திருந்தார்.

‘நாங்கள் இருவரும் ஆடைகள் இன்றி இருந்தபோது…’

லண்டனில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் ஃப்ளோரன்ஸ் பியூ பேசுகையில், “எங்களுக்கும் இதுவரை யாரும் அறியாத ஒரு சுவாரசிய சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் நடந்தது.

சிலியன் மரஃபி மற்றும் நான் பங்குபெற்ற நிர்வாண காட்சியைப் படமாக்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென கேமரா பழுதாகிவிட்டது.

நாங்கள் இருவரும் ஆடைகள் எதுவும் இன்றி இருந்த அந்த தருணத்தில் கேமரா பழுதானது மிகவும் சங்கடமான ஒரு சூழலை உருவாக்கியது.”

அந்த காட்சி ஒரு ‘Closed Set’ என்பதால், மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை இரு நடிகர்களும் தங்கள் உடலைக் கைகளால் மறைத்தபடி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு கேமராவும் ஏற்கனவே பழுதுபார்க்கும் மையத்தில் இருந்ததால், உடனடியாக வேறு கேமராவைப் பயன்படுத்த இயலவில்லை.

இதன்பின், பழுதைச் சரிசெய்ய ஒரு கேமரா தொழில்நுட்ப வல்லுநர் அந்த அறைக்குள் வரவழைக்கப்பட்டார்.

இந்த அசௌகரியமான அமைதியைத் தவிர்க்க எண்ணிய ஃப்ளோரன்ஸ் பியூ, அந்த நேரத்தை ஒரு கற்றல் வாய்ப்பாக மாற்றிக் கொண்டார்.

அவர் தொழில்நுட்ப வல்லுநரிடம், “சரி நண்பரே, இந்த கேமராவின் ஷட்டரில் என்ன பிரச்சனை? என்ன ஆனது?”* என்று ஆர்வம் பொங்க கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

பின்னர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனும் அங்கு வந்து, கேமராவிற்குள் வெளிச்சம் தவறான வழியில் ஊடுருவியதால் தான் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பதை விளக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்ட ஃப்ளோரன்ஸ் பியூ, ‘ஓபன்ஹைமர்’ படக்குழுவின் தொழில்முறை திறமையைப் வெகுவாகப் பாராட்டினார்.

“படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒவ்வொரு நபரும் சினிமா தொழில்நுட்பத்தைப் பற்றி மிகவும் ஆழமான அறிவு படைத்தவர்களாக இருந்தனர்.

இத்தகைய அர்ப்பணிப்புள்ள குழுவுடன் பணியாற்றிய ஒவ்வொரு நொடியும் எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *