கொல்கத்தாவை 18.4 ஓவரிலேயே வீழ்த்தியது பஞ்சாப்!! பேர்ஸ்டோ, ஷஷாங்க் சிங் அதிரடி…..

கொல்கத்தா:
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இன்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதல் இறுதி வரை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக தொடக்க வீரர்களான சுனில் நரேன் – சால்ட் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.

இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- பேர்ஸ்டோ களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் சிங் 18 பந்தில் அரை சதம் கடந்தார். இவர் 54 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ரிலீ ரோசோவ் 26 ரன்னில் வெளியேறினார். தொடக்கம் மெதுவாக ஆரம்பித்த பேர்ஸ்டோ பின்னர் அதிரடி காட்டி சதம் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி 15 ஓவரில் 201 ரன்கள் குவித்தது.

இதனால் கொல்கத்தா அணிக்கு 5 ஓவரில் 61 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ஷஷாங்க் சிங் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி சிக்சருமாக மாற்றினார். இதனால் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.

பேர்ஸ்டோ 108 ரன்னிலும் ஷஷாங்க் சிங் 68 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *