தமிழகம் முழுவதும் தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை திறக்க பிரேமலதா கோரிக்கை!!

தமிழகம் முழுவதும் தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை திறக்க பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முடிவுக்கு வந்ததாலும், வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாலும், தொடர்ந்து அக்கினி நட்சத்திரம் தொடங்க இருப்பதாலும், தமிழகம் முழுவதும் தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை ஆண்டுதோறும் நாம் திறப்பதுபோல் இந்த ஆண்டும் (2024) அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொது மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

“இயன்றதைச் செய்வோம் இல்லாதவற்கே” என்று கேப்டன் நமக்கு சொல்லி கொடுத்த பாதையில், நாம் மக்களுக்கு இந்த கோடை காலத்தில் நம்மால் இயன்ற உதவிகளை செய்து கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காப்பது நமது கடமையாகும்.என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *