ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுதாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் ஒரு சிசிடிவி கேமரா நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை செயல்படவில்லை .
220க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ள நிலையில் ஸ்ட்ராங் ரூமுக்கு வெளியே வைக்கப்பட்ட கேமரா பழுதானது. பழுது ஏற்பட்ட சிசிடிவி கேமரா உடனே சரி செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தகவல் தெரிவித்துள்ளார்.